நடன நிகழ்ச்சி ஒன்றில் உடன் ஆடியவரின் கைநழுவியதால் பிரபல நடிகை ஒருவர் மேடையில் தலை கீழாக விழுந்தார். அச்சம்பவத்தைக் கண்டு நடுவர்களும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழில், ’கள்வனின் காதலி’, ’வந்தே மாதரம்’ உட்பட சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை ஸ்ரத்தா ஆர்யா. ஒன்றிரண்டு தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். இவர்  பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்டு வரும் ‘நாச் பலியே’ என்ற டிவி. ரியாலிட்டி ஷோவின் 9 வது தொடரில் பங்கேற்று வருகிறார். இதற்கான படப்பிடிப்பில், தனது ஆண் நண்பர் ஆலம் மக்காருடன் கடந்த சில நாட்களுக்கு முன் கலந்து கொண்டார்.

இரு தினங்களுக்கு முன்பு அவர் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோது, ஆலம் அவரைத் தலைகீழாக தூக்கி வைத்திருக்க வேண்டும். அப்போது எதிர்பாராதவிதமாக ஆலமின் கை நழுவியதில்,  அவரது தோள்பட்டையிலிருந்து கீழே விழுந்தார் ஸ்ரத்தா. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.சிறிது நேரத்தில் அவர்மயங்கிவிட்டார்.உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது.

இதுபற்றி அவர் கூறும்போது,பலத்த காயம் ஏதுமில்லை என்றாலும் பெரிய விபத்தில் இருந்து தப்பியிருக்கிறேன். ஆலம், கை வழுவியதால் கீழே விழுந்துவிட்டேன். அப்படி விழுந்தபோது ஒரு கணம் முற்றிலுமாக நினைவு தப்பிய பின்னரே சகஜ நிலைக்கு வந்தேன். பயிற்சியின் போது சரியாக ஆடினோம். நடுவர்கள் முன்னால் தடுமாறிவிட் டோம். இருந்தாலும் சிறப்பாக ஆடியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த நாச் பாலியே நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் நடிகர் சல்மான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.