நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, விசில், ஸ்டுடென்ட் நம்பர் 1 போன்ற படங்களில் நடித்தார். பின் ஒரு சில காரணங்களால் திரையுலகை விட்டே ஒதுங்கினார். 

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால்,  பிக்பாஸ்  மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.

மிகவும் ஒல்லியாக இருந்த இவர், தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கு திரைப்படங்களில் நடிக்க நல்ல வாய்ப்புகள் வரும் என்று  நம்புகிறார்.

இது ஒரு புறம் இருக்க, இவர் காதலருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.  
ஆனால் இவரின் காதலர் ராகுலை, கடந்த 8 மாதங்களாக காதலித்து சமீபத்தில் தான் ஷெரின் ப்ரேக் அப் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.