நடிகை ஷெரின், சமீபத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து, தற்போது தன்னுடைய பரிசோதனை முடிவு தவறாக வந்திருக்கலாம் என, மருத்துவர் தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை ஷெரின், சமீபத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து, தற்போது தன்னுடைய பரிசோதனை முடிவு தவறாக வந்திருக்கலாம் என, மருத்துவர் தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பின்னர் விசில் போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும், ஷெரினால் சினிமாவில் பெரிய இடத்தை பிடிக்க முடியாவில்லை. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஷெரின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக மாற ஆரம்பித்தார்.

உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம் லுக்கிற்கு மாறிய ஷெரின் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார் போட்டோ ஷூட், பட அப்டேட் என அனைத்தும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அப்படி ஷெரின் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,“எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ் என வந்துள்ளது. கடந்த 3-4 நாட்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, விரைவில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் எனக்கு இந்த தொற்று எங்கியிருந்து ஏற்பட்டிருக்கும் என தெரியவில்லை, எனவே தன்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்து பாதுகாப்புடன் இருக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தன்னுடைய பரிசோதனை முடிவு தவறாக வந்திருக்க கூடும் என, மருத்துவர் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது, தன்னுடைய முதல் பரிசோதனை 16 ஆம் தேதி செய்யப்பட்ட போது பாசிட்டிவ் என வந்ததாகவும், அதை தொடர்ந்து மீண்டும் 17 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்த போது, நெகடிவ் என வந்தது... இன்றும் எனக்கு நெகடிவ் என வந்துள்ளது. எனவே தன்னுடைய மருத்துவர் முதல் பரிசோதனை தவறாக வந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். எனினும் நான் தனிமையில் தான் இருக்கிறேன், நலமுடன் உள்ளேன்... உங்கள் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். 

View post on Instagram