actress shalini padndey sad life

தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை ஷாலினி பாண்டே. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழில், நடிகர் ஜி.வி.க்கு ஜோடியாக '100% லவ்' படத்திலும், ஜீவாவுக்கு ஜோடியாக 'கொரில்லா' என இரண்டு படங்கள் இவர் கைவசம் உள்ளது. 

தன்னுடைய முதல் படம்மான அர்ஜுன் ரெட்டி படத்தில், முதல் பாதியில் மட்டும் 17 லிப் லாக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய இவர், இன்று ரசிகர்களால் பிரபல நடிகையாக அறியப்பட்டாலும்... நிஜ வாழ்கையில் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். 

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள ஷாலினி பாண்டே "என் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, மும்பைக்கு வந்தேன். 

அங்கு இரண்டு ஆண்கள் தங்கியிருந்த, வீட்டில் நானும் என்னுடைய தோழியும் தங்கி இருந்தோம். ஆனால் அந்த ஆண்கள் இருவரும் எங்களை தவறாக நினைத்ததே இல்லை.

கல்லூரியில் படித்த போதும், சினிமாவிற்கு வந்த பிறகும் இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தேன். நான் காதல் தோல்வியில் இருந்த போது தான் 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் வாய்ப்புக் கிடைத்தது. இந்த படத்தில் நான் விஜயுடன் காதல் காட்சியில் நடித்த போது நரக வேதனையாக இருந்தது என தெரிவித்துள்ளார்".