சில்க் ஸ்மிதா

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு த டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாக வெளிவந்தது.இதில் சில்க் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்.இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.வித்யா பாலனுக்கு நல்ல நடிகை என்ற  பெயரை வாங்கி தந்தது.

படுக்கையறை

இதனால் சர்ச்சைகுரிய நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் இயக்குனர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.அந்த வகையில் 16 வயதில் திரையுலகில் கால் பதித்து ஆபாச நடிகையாக படுக்கையறை காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷகிலா.

முன்னணி

கேரள திரையுலகில் கொடி கட்டி பறந்த ஷகிலாவின் படங்களுக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும்.அந்த காலத்தில் ஷகிலாவின் படம் வருகிறது என்றால் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன் லால், போன்றோர்களே தங்கள் படங்களின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்து விடுவார்களாம்.

சுயசரிதை

அந்த அளவுக்கு கேரள திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய ஷகிலாவை விரட்ட சதி வேலைகள் நடந்தன.இதனால் அவர் சென்னைக்கு குடிபெயர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் தனக்கு நடந்த கொடுமைகள் தன்னை ஏமாற்றியவர்கள் விவரங்கள் பற்றி சுயசரிதையாக எழுதி உள்ளார் ஷகிலா.

பயம்

இவருடைய  வாழ்க்கை வரலாற்றை தற்போது படமாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் என்பவர் எடுக்கிறார்.இப்படத்தில் ஷகிலாவாக பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார்.வரும் ஏப்ரல் மாதம் அல்லது மே மாதம் படப்பிடிப்பு நடக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதால் சம்பந்த பட்ட நடிகர்கள் பயத்தில் இருக்கிறார்களாம்