actress sexual harresment issue

இளம் நடிகர் குறித்து ஒரு பெண் தற்போது கூறியுள்ள தகவல் கன்னட சினிமா துறையினரை அதிரவைத்துள்ளது. கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சுப்ரமண்யா என்பவர். இவர் கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணுடன் நட்பு ரீதியில் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு நாள் அந்தப் பெண்ணை சுப்ரமண்யா தன்னுடைய அக்கா வீட்டு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தன்னுடைய நண்பர் ஒருவரின் பங்களாவிற்கு அழைத்துச் சென்று, அந்தப் பெண்ணுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் தற்போது கர்நாடகாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தற்போது சுப்ரமண்யா தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் அந்தப் புகரில் குறிப்பிட்டுள்ளார். இவரது புகாரை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் இளம் நடிகர் சுப்ரமண்யா போலீசாருக்கு பயந்து தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.