actress seetha talk about keethana love

'புதியபாதை' தம்பதிகளில் மகள் கீர்த்தனாவின் திருமணம் தான் தற்போது கோலிவுட் திரையுலகில் ஹாட் நியூஸ். கீர்த்தனா மற்றும் அவருடைய காதலர் அக்ஷய்யின் திருமணம் வரும் மார்ச் மாதம் 8ம் தேதி நடைப்பெற உள்ளது. இவர்களுடைய திருமணத்திற்காக நடிகர் பார்த்திபன் அனைத்து பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

சீதாவின் பேச்சு:

இந்நிலையில் கீர்த்தனாவின் அம்மா சீதா இவர்களுடைய மகள் திருமணம் குறித்துப் பேசுகையில்...

கீர்த்தனாவை தற்போது திருமணம் செய்துக்கொள்ள உள்ள மாப்பிள்ளையை எங்களுக்கு ஏழு வயதில் இருந்து தெரியும். இருவரும் சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். இருவரும் லயோலா கல்லூரியில் ஒன்றாகத் தான் விஷுவல் கம்யூனிகேஷன் கோர்ஸ் படித்தனர். பின் நண்பர்களாக இருந்த இவர்கள் எட்டு வருடமாக காதலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மாப்பிள்ளையையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி சீதா கூறுகையில், தேடி பிடிச்சாலும் இப்படி ஒரு மாப்பிள்ளையும் தங்கமான மாமியாரும் என் மகளுக்கு கிடைக்க மாட்டாங்க என கூறி பூரித்தார்.

காதல் குறித்து கீர்த்தனா வீட்டில் சொன்னதும் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும். ஜாதகம் பார்த்தால் நல்லது என தோன்றியது அதிலும் இவர்களுக்குள் நல்ல பொருத்தம் உள்ளது என கூறி சந்தோஷப்பட்டர் சீதா