பிரபல நடிகையும், ஆர்யாவின் மனைவியுமான நடிகை சாயிஷா பல படங்களில்  தன்னை சிறந்த டான்சர் என நிரூபித்து விட்ட நிலையில், தற்போது இவர் பாடி வெளியிட்டுள்ள காதல் பாடல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
 
கோலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா - ஜோதிகா நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான 'காக்க காக்க' படத்தில், இடம்பெற்ற 'ஒன்றா இரண்டா' பாடலை பாடி அசதி இருக்கிறார் சாயிஷா. இது இவருக்கு மட்டும் இன்றி நடிகை ஜோதிகாவிற்கும் ஃபேவரட் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை எங்கு இருந்து பாடினார் தெரியுமா சாயிஷா..? கணவர் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் 'டெடி' படத்தின் படப்பிடிப்பில் இருந்து தான் பாடியுள்ளார்.  

தமிழ் மொழி இவருக்கு தெரியாவிட்டாலும், இந்த பாடலின் வரிகளில் உள்ள அர்த்தத்தை புரிந்து அழகாக பாடியுள்ளார். 

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் ஓய்வு நேரத்தில்... இந்த பாடலை பாடினேன் என்றும் பயிற்சி எடுத்து கொள்ளாமல் இந்த பாடலை தான் பாடியதாகவும், இதில் ஏதும் பிழை இருந்தால் பொறுத்துகொள்ளவும் என பதிவிட்டுள்ளார்.