சினிமா துறையில் நடிகையர் திலகம் என்று பெயர் பெற்றவர் நடிகை சாவித்திரி. இவரை போல் எந்த ஒரு நடிகையும் சம்பாதிக்க முடியாது என இவருடைய சம்பளத்தை கேட்டு வாய்யடைத்த காலமும் உண்டு.

இந்நிலையில் நடிகை சாவித்திரியை பற்றி தனக்கு தெரிந்த பலவற்றை நடிகை ஜமுனா, பிரபல நாளிதழில் தெரிவித்துள்ளார்.

இதில் சாவித்திரியின் சொத்து விவரத்தையும் தெரிவித்துள்ளார்...  

சாவித்திரிக்கு சென்னையில் மட்டும் 3 பங்களா வீடுகள் இருந்ததாம். அந்த காலத்திலேயே வீட்டின் உள்ளே நீச்சல் குளம் கட்டி இருந்ததாகவும். மைசூரில் இருந்து சந்தன கட்டைகளை வரவழைத்து பூஜை அரை உருவாக்கினாராம்.

அதே போல் கொடைக்கானலில் ஒரு வீடு இருந்ததாகவும். அந்த காலகட்டத்திலேயே இவருடைய வீடு 1 கோடி ருபாய் விலைக்கு கேட்கப்பட்டதாம் தெரிவித்துள்ளார் ஜமுனா.

ஆனால் அவர் சம்பாதித்த அத்தனை சொத்துக்களும் இடம் தெரியாமல் எப்படியோ கரைந்து விட்டது. கடைசி காலத்தில் மதுவுக்கு அடிமையாகி உடல் மெலிந்து துரும்பாக மாறி கோமா நிலையிலேயே இறந்தார் என மிகவும் வேதனையோடு கூறியுள்ளார் நடிகை ஜமுனா.