விஜய் ஆண்டனி படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு ரவுண்டுக்கு தயாரான பாலா பட நடிகை!

https://static.asianetnews.com/images/authors/e065074c-8e18-5858-afb6-5be406a1a979.jpg
First Published 15, Mar 2019, 6:18 PM IST
actress sangeetha join vijay antony movie
Highlights

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'பிதாமகன்' படத்தில், எதார்த்தமான நடிப்பால், அனைத்து ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் நடிகை சங்கீதா. இந்த படம் இவருக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது என்று கூறலாம்.
 

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'பிதாமகன்' படத்தில், எதார்த்தமான நடிப்பால், அனைத்து ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் நடிகை சங்கீதா. இந்த படம் இவருக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக, ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்து வந்த இவர், தற்போது நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வரும் 'தமிழரசன்' படத்தின் மீண்டும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஏக்கனவே சங்கீதாவை வைத்து 'தனம்' என்கிற படத்தை  தயாரித்த சிவாவின் மனைவி தான் 'தமிழரசன்' படத்தையும் தயாரிக்க உள்ளார்.

இந்த படம் வெளிவந்தவுடன் மீண்டும் சங்கீதா, தமிழ்த்திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று படக்குழுவினர் பெருமையாக பேசுகிறார்கள்.

பாபுயோகேஸ்வரன் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார். கடந்த ஜனவரி முதல் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்தில் சுரேஷ் கோபி, சென்றாயன், ராதாரவி, சோனு சூட், சாயாசிங், கஸ்தூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா இசையில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் ஒரு குடும்ப மற்றும் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படம் ஆகும்

loader