நடிகர் ஜீவா - நயன்தாரா நடிப்பில் கடந்த 2006 ஆண்டு வெளியான 'ஈ' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் நடிகை சனாகான். இந்த படத்தை தொடர்ந்து, சிம்பு இரட்டை வேடத்தில் நடித்த, 'சிலம்பாட்டம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் பயணம், தலைவா, அன்பானவன் அடங்காதவன் அசரதவன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து வந்தாலும், இந்தியிலும் சின்ன திரை நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

30 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த இவர், இவருடைய காதலர் யார் என ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவ்வப்போது அவருடன் எடுத்துக்கொள்ளும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சனா கான் , பிரபல நடன பயிற்சியாளர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் இந்த வருடம் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.