ஒன்பது மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் நீருக்கு அடியில் நடிகை சமீரா ரெட்டி ஃபோட்டோ ஷூட் எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஸ்டில்கள் வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. தாய்மையடைந்திருக்கும் பெண்களுக்கு ஊக்க எண்ணத்தை ஏற்படுத்தவே இப்படங்களை எடுத்து பகிர்கிறேன் என்கிறார் அவர்.

38 வயதாகும் ஷமீரா ரெட்டி தற்போது இரண்டாவது முறையாகக் கர்ப்பமாக உள்ளார். ஏராளமான இந்திப்படங்களில் நடித்த அவர் கவுதம் வாசுதேவ மேனனின் ‘வாரணம் ஆயிரம்’படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்து அஜித்தின் ‘அசல்’ மற்றும் ‘வெடி’,’வேட்டை’ ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது எடுத்துள்ள புகைப்படங்கள் குறித்து நெகட்டிவ்வாக கமெண்ட் அடிப்பவர்கள் தாங்களும் ஒரு தாய் வயிற்றிலிருந்து வந்தவர்கள் என்பதை உணர்ந்தால் இப்படி செய்யமாட்டார்கள். 9 மாத கர்ப்பம் என்பது பொதுவாக பெண்கள் அச்சப்படும் தருணம். அதெல்லாம் தேவையில்லை. வாழ்வின் எல்லாத் தருணங்களுமே உற்சாகத்துடன் கொண்டாடப்படவேண்டியவையே என்பதை உணர்த்தவே இந்த ஃபோட்டோ ஷூட்டை நடத்தி எனது பரவச அனுபவங்களை வெளியிடுகிறேன்’என்கிறார் சமீராம்மா.