'வாரணம் ஆயிரம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. பின் அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். மேலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை சமீரா ரெட்டிக்கும், தொழிலதிபர் அக்ஷய் வார்த்தேவுக்கும் கடந்த 2004  ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு குழாந்தை இருக்கிறான்.

இந்த நிலையில் சமீரா ரெட்டி, மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். வயிறு பெரிதாகி கர்ப்பிணியாக இருக்கும் தனது தோற்றத்தை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இவரின் இந்த தோற்றத்தை பார்த்து நெட்டிசன்கள் பலர் கேலி செய்ததோடு... கவர்ச்சியாக இருக்கிறார் என விமர்சித்தனர். 

இதற்க்கு பதிலடி கொடுத்து சமீரா ரெட்டி தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்... அதில் கூறியிருப்பதாவது:

"கர்ப்பிணியாக இருக்கும் என்னை கேலி செய்கின்றனர். உங்கள் அம்மாவின் வழியாகத்தான், நீங்கள் இந்த உலகத்துக்கு வந்து இருக்கிறீர்கள். நீங்கள் பிறந்த போது உங்கள் தாய் கவற்சியாகவா இருந்தார்?  தாய்மை என்பது இயற்கையானது. அது அழகானது. முதல் குழந்தை பிறந்ததும் உடல் எடையை குறைக்க எனக்கு சில காலம் தேவைப்பட்டது.

அது போல் 2 - வது குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்குவேன். இந்தி நடிகை கரீனா கபூர் போன்று சிலர் மட்டும் குழந்தை பிறந்ததும் அழகாக காட்சி அளிப்பார்கள். ஆனால் என்னை போன்ற பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு, பழைய தோற்றத்திற்கு மீண்டும் உடலை கொண்டு வர சில காலங்கள் ஆகும் என சமீரா மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.