நடிகை சமந்தா திருமணத்தை தொடர்ந்தும், ரசிகர்களை ஏமாற்றாமல் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  

நடிகை சமந்தா திருமணத்தை தொடர்ந்தும், ரசிகர்களை ஏமாற்றாமல் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என்றாலும், இவருக்கு பட வாய்ப்புகள் மட்டும் குறைந்த பாடில்லை. விரைவில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகவுள்ளது.

மேலும் தமிழில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்து வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 96 திரைப்படத்தின், தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள சமந்தா. தற்போது அல்டிமேட் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

View post on Instagram
View post on Instagram