சக நடிகைகளின் வளர்ச்சியைக் கண்டு சஞ்சலப்படும் நடிகைகளுக்கு மத்தியில் ’உயரே’படத்தில் சவாலான பாத்திரம் ஒன்றில்  நடித்த நடிகை பார்வதி மேனனை உச்சி முகர்ந்து புகழ்ந்திருக்கிறார் ‘சூப்பர் டீலக்ஸ்’நாயகி சமந்தா அக்கினேனி.

சில வாரங்களுக்கு முன் ரிலீஸான மலையாளப்படமான ‘உயரே’விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் ஒருசேரக் கொண்டாடப்பட்ட தரமான படம். இப்படத்தில் பார்வதி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக, ஒரு ஐந்தாறு தேசிய விருதுகள் தரத்தக்க அளவுக்கு அபாரமாக நடித்திருந்தார்.

ஏற்கனவே இந்தியா முழுக்க உள்ள சினிமா பிரபலங்கள் இப்படத்தையும் பார்வதியின் நடிப்பையும் இப்படத்தின் நேர்த்தியையும் பாராட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவ்வரிசையில் தன்னை சற்று தாமதமாக இணைத்துக்கொண்ட சமந்தா,...’உயரே’ படத்தைத் தற்போதுதான் பார்த்தேன். இப்படம் உங்களின் கோபத்தைத் தூண்டும். உங்களை அழ வைக்கும். சிந்திக்கவைக்கும். காதல்கொள்ளவைக்கும். இப்படி எல்லாவிதத்திலும் உங்களை வசீகரிக்கும். நன்றி பார்வதி உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன். மற்றும் இயக்குநர் மனு கதாசிரியர் பாபி சஞ்சய் அபாரமான படைப்பு’...என்று தரமாகப் புகழ்ந்துள்ளார் சமந்தா.