எல்லா ஹீரோயின்களும் அதிரடி ஆக்‌ஷன்கள் படங்களில் நடிக்க ஆரம்பித்து அசத்திக்கொண்டிருக்கும்போது சமந்தா மட்டும் சும்மா இருப்பாரா? தொடர்ச்சியாக ஜிம்மில் சாகச உடற்பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கும் அவர் அந்த வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு தன் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும், சமந்தா அக்கினேனி தனது தனிப்பட்ட திறன்களால் ரசிகர்களை கவர்கிறார். நடிப்பை தவிர, ஃபேஷன், ஃபிட்னெஸ் போன்றவற்றில் தனி கவனம் செலுத்தி வரும் சமந்தா, அது சம்பந்தமான படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது, ஜிம்மில் தான் செய்த ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். தனது அடுத்தப் படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், உடற்பயிற்சிக்கென தனியாக நேரம் ஒதுக்கி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் சமந்தா.ஐதராபாத்தில் உள்ள பார்க்லர் ஸ்டண்டில், இந்த அரிய சாகசத்தை நிகழ்த்தியுள்ளார். அந்த வீடியோவை, சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு இதுவரை 7 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன. கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் கமெண்ட் செய்துள்ளனர்.

சமந்தா மிக விரைவில் தனது மாமியார் அமலா போலவே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாக இருக்கும் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். அதற்காக இந்த அரிய ஸ்டண்ட் பெர்பார்மன்ஸ்களில் ஈடுபட்டு வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதனை சமந்தா தரப்பு உறுதிப்படுத்தவில்லை.சமந்தா, லேடி சூப்பர் ஸ்டார் ஆவது மட்டும் உறுதி என்று அவருடைய நண்பர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

View post on Instagram