பாடகி சின்மயி மகன்களுடன் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடிகை சமந்தா போட்ட கியூட் டான்ஸ் - வைரலாகும் வீடியோ
பாடகி சின்மயி வீட்டுக்கு சென்றிருந்த நடிகை சமந்தா, அங்கு குழந்தைகளுடன் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது சிட்டாடெல் என்கிற இந்தி வெப் தொடரும், குஷி என்கிற தெலுங்கு திரைப்படமும் உருவாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. குஷி திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஷிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா.
அதேபோல் அவர் நடித்துள்ள சிட்டாடெல் வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே இயக்கி உள்ளனர். இந்த வெப் தொடரில் சமந்தாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த இரண்டு புராஜெக்ட்டிலும் நடித்து முடித்துள்ள சமந்தா, மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுப்பதற்காக சினிமாவில் இருந்து சில மாதங்கள் விலகி உள்ளார். இதனால் புதிதாக அவர் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.
இதையும் படியுங்கள்... வாரிசு பட ஷூட்டிங்.. சூப்பர் ஸ்டார் பற்றி கேட்டறிந்த தளபதி விஜய் - பல உண்மைகளை உடைத்த பிரபலம்!
சிகிச்சைக்கு முன் சுற்றுலா சென்ற சமந்தா, முதல் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து தன் தோழியுடன் பாலி தீவுக்கு சென்றிருந்த சமந்தா, அங்கு ஒரு வாரம் தங்கி ஜாலியாக பொழுதை கழித்து வந்தார். இந்நிலையில், தற்போது இந்தியா திரும்பி உள்ள அவர், பாடகி சின்மயி வீட்டுக்கு சென்றிருக்கிறார். சமந்தாவும், சின்மயியும் நெருங்கிய தோழிகள் ஆவர்.
சின்மயி வீட்டில் அவரது செல்ல மகன்களுடன் நடிகை சமந்தா விளையாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவில் ஷோபாவில் அமர்ந்தபடியே, சின்மயி மகன் ஷ்ரவாஸ் உடன் நாட்டு நாட்டு பாடலுக்கு கியூட்டாக நடனம் ஆடி இருக்கிறார் சம்மு. மற்றொரு வீடியோவில் அவர்களுடன் சேரை தள்ளிக்கொண்டு விளையாடும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. சமந்தாவின் இந்த லேட்டஸ்ட் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன.
இதையும் படியுங்கள்... தவமிருந்து பெற்ற மகளுக்கு இதயத்தில் 2 ஓட்டை.. பிறந்த 3 மாதத்திலேயே ஓபன் ஹார்ட் சர்ஜரி - விஜய் பட நடிகை கண்ணீர்