என்கவுண்டர் கொண்டாடக் கூடிய வகையில் அது மகிழ்ச்சியான விஷயம் இல்லை என நடிகை சமந்தா கருத்து தெரிவித்துள்ளார்.  நீண்ட மவுனத்திற்கு பிறகு நடிகை சமந்தா தெலுங்கானா  என்கவுண்டர் குறித்து கருத்து  தெரிவித்துள்ளார் .  தெலுங்கானா என்கவுண்டர் குறித்தும் பலாத்கார சம்பவம் குறித்தும் நடிகை சமந்தா வெளிப்படையாகப் பேசவில்லை என அவர் மீது கடுமையான விமர்சனங்கள்  எழுந்தது .  சமூக வலைதளத்திலும் பலர் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வந்தனர். 

இந்நிலையில் இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார் சமந்தா ,  அதில் இந்த சம்பவம் நடந்த போது அதுபற்றி நான் எதுவுமே கூறவில்லை,  பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கலை தெரிவிக்கவில்லை , என்று குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு செய்தியும் எனக்கு வந்தது .  ஒரு டுவிட் செய்து விட்டால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நேர்ந்த குற்ற உணர்விலிருந்து அது நம்மை விடுவித்து விடாது  என  குறிப்பிட்டுள்ளார் .   ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் பெண்கள் ஏழைகள் ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி வருகிறார் சமாந்தா , ஆனால்  இது பற்றி அவர் பேசவில்லை என்பதுதான் அவர் மீது எழுந்த விமர்சனத்திற்கு காரணம் .  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,  இந்த என்கவுண்டர் மகிழ்ச்சி அளிக்கிறது என்று சொல்வது தவறு. மாறாஎ  பயம்தான் அதிகரித்திருக்கிறது .

 

நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ,  இந்த சம்பவம் நமது நீதித்துறை மற்றும் சட்ட அமைப்புக்கு நீதிகளை விரைந்து வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வுக்கான அழைப்பாக நிச்சயம் இருக்கும்  என நான் நம்புகிறேன் .  பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக இவ்வளவு காலம் காத்திருக்க கூடாது .  அதே நேரத்தில் இது போன்ற என் கவுண்டர்களை கொண்டாடவும் நான் விரும்பவில்லை ,  அதற்கு என்கவுண்டர்கள் மகிழ்ச்சியான விஷயமும் அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.