actress samantha go to tiruppathi
கடந்த சில தினங்களுக்கு முன் இளையதளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார் சமந்தா. மேலும் வரும் அக்டோபர் மாதம் இவருக்கும் நடிகர் நாகசைதன்யாவிற்கும் திருமணம் நடைபெற உள்ளதால் ஒப்புக்கொண்ட படங்களை நடித்து முடிக்க இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஏற்கடவே கடந்த இரண்டு மாதத்திற்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யவந்தார். தற்போது இன்று திடீரென திருப்பதிக்கு வந்தார்.
இவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், தீர்த்த பிரசாதங்களை வழங்கி சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்யவைத்தனர்.
இப்போதெல்லாம் சமந்தா அடிக்கடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருவதால், இவர் பெருமாள் பக்தையாக மாறிவிட்டார் என்பதை காட்டுகிறது.
