வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர் சி நடித்துள்ள "இருட்டு" படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்தப் படத்தை வரும் 11ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ள படக்குழு தீர்மானித்துள்ளது. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள அதில், வி.டி.வி. கணேஷ், விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக புதுநாயகி சாக்‌ஷி செளத்ரி அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் சுந்தர் சியுடன் நடித்துள்ள ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க சாக்‌ஷி செளத்ரி ஓவர் தாராளம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஷூட்டிங்கில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

தமிழில்அறிமுக நடிகை என்றாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் சாக்‌ஷி செளத்ரி. சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சாக்‌ஷி, அனைத்து கேள்விகளுக்கும் ஒளிவுமறைவின்றி பதிலளித்தார். அப்போது நீங்கள் யாருடன் லிப் லாக் சீனில் நடிக்க விரும்புவீர்கள் என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் தளபதி விஜய் உடன் நடிக்க ஆசை என அதிரடி பதிலளித்துள்ளார். 

ஏற்கனவே இருட்டு படத்தில் சுந்தர் சி உடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ள சாக்‌ஷி, அடுத்ததாக தளபதி விஜய்யை டார்க்கெட் செய்துள்ளார். சாக்‌ஷியின் இந்த துணிச்சலான பதிலை விஜய் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்.