’பிக்பாஸ் நிகழ்ச்சியில் செரினுக்கு ஆதரவாகப் பேசுகிறேன்’ என்கிற எண்ணத்தில் பார்வையாளர்கள் நாய்கள் என்று மட்டமாகக் கமெண்ட் அடித்த நடிகை சாக்‌ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்டார்.

75 நாட்களைக் கடந்து சர்ச்சை நடைபோட்டுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சில தினங்களுக்கு முன்பு மோகன் வைத்யா, நடிகைகள் அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் மீண்டும் வருகை தந்தனர். அந்த சமயத்தில் தர்ஷனுக்கும் ஷெரினுக்கும் இடையே காதல் இருப்பதாக ஒரு பரபரப்பு கிளப்பிவிடப்பட்ட நிலையில், ஷெரினுக்கு ஆதரவாகப் பேசிய சாக்‌ஷி ‘கண்ட நாய்ங்க கண்டபடி குரைக்கும். அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாத்’ என்று கடுமையான வார்த்தைகளில் பார்வையாளர்களைக் கமெண்ட் அடித்தார். அவரது அந்த அகமெண்ட் வலைதளங்களில் வைரலாக மக்கள் அவரைக் கண்டபடி திட்டித் தீர்த்தனர். இச்செய்தியை கமல் சாக்‌ஷியின் பார்வைக்குக் கமல் கொண்டு வந்தபோது’நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை. நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது’என்று சப்பையாக ஒரு விளக்கம் அளித்தார். அந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்பதுபோல் கமல் தனது முகபாவத்தை காட்டியிருந்தார்.

இந்நிலையில்  நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ’அனைத்து பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும். எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். அதற்காக உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது ஷெரினை ஆறுதல் படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி. 

உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதி அளிக்கிறேன். உங்கள் அனைவரிடம் இருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு, மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். அதனால் நான் தற்செயலாக தவறு செய்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து ஆதரவளிக்கவும்”என்று பதிவிட்டிருக்கிறார்.