கடந்த 20 ஆண்டுகளாக பல மலையாள படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், மேடை நாடகங்களிலும் நடித்து வருபவர் நடிகை சஜிதா மாடத்தில். 

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு  நடித்த ஷட்டர் படத்திற்காக, சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றவர். மேலும் வர்ஷம், தி ரிப்போர்ட்டர், இதுதாண்டா போலீஸ், ராணி பத்மினி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'கலீபா', 'கூட', மற்றும் 'சந்திரகிரி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரை கார்த்தி என்கிற, துணை இயக்குனர் ஒருவர் தன்னுடைய படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்குமாறு போன் மூலம் அணுகியுள்ளார். அதற்கு படத்தின் கதையை, மெயிலில் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார் சஜிதா. பின்னர் அந்த துணை இயக்குனர் வழிந்தபடி, நீங்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என  கூறியுள்ளார்.

இதனை கேட்டதும் அந்த இயக்குநரை கடுமையாக திட்டிய கிழித்து தொங்கவிட்டுள்ளார் சஜிதா. பின்னர், முகநூல் பக்கத்தில் அந்த நபரின் எண்ணைக் பதிவிட்டு... அவர் கூறிய விஷயங்களை ரசிகர்களுக்கும் தெரியும்படி கூறினார். இவரை வசை பாடுவதற்காக பலர் அந்த துணை இயக்குனரை தொடர்பு கொண்ட போது,  சுவிட்ஜ் ஆப் செய்துவிட்டார். 

சஜிதாவின் முகநூல் பதிவு இதோ: