“பிரேமம்” படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், சாய் பல்லவி கொக்கி போட்டு கொள்ளையடித்தது என்னமோ தமிழ் ரசிகர்களை தான். “பிரேமம்” படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. பக்கா தமிழ் பெண்ணான சாய் பல்லவி டாக்டர் பட்டம் பெற்றவர். 

இதையும் படிங்க: டூ பீஸில் குதிரை சவாரி... நெருப்பே இல்லாமல் இணையத்தை சூடேற்றிய கவர்ச்சி கன்னி சன்னி லியோன்...!

மலையாளம் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சாய் பல்லவியை தமிழில் சினிமாவில் பார்க்க வேண்டுமென கோலிவுட்டே தவம் கிடந்தது. அதற்கு ஏத்த மாதிரியே தமிழில் “கரு“ படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் “மாரி 2” படத்தில் தனுஷுடன் சேர்ந்து ரவுடி பேபி பாட்டுக்கு ஆட்டத்தில் மொத்த தமிழ்நாடே கதிகலங்கியது. 

இதையும் படிங்க: ஆபாச வீடியோ?... முதல் முறையாக மனம் திறந்த பிக்பாஸ் லாஸ்லியா...!

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள படம் “லவ்ஸ்டோரி”. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான அழகான காதல் கிராமத்தில் தொடங்கி நகரத்தை நோக்கி நகருவது போன்ற கதைக்களத்துடன் படம் உருவாகியுள்ளது. பக்கா தெலங்கானா கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த படத்திற்காக இயக்குநர் நடிப்பு பட்டறைகள் எல்லாம் நடத்தி, ஹீரோ நாக சைதன்யாவுக்கும், சாய் பல்லவிக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: சரிந்தது “பாகுபலி”யின் பிரம்மாண்ட சாம்ராஜ்யம்... காத்திருந்து வச்சி செஞ்ச தெலுங்கு சூப்பர் ஸ்டார்...!

இதையடுத்து சாய் பல்லவி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் படம் ஃபிதா.  சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள சாய் பல்லவி, இந்த படத்திற்காக தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் பகிர்ந்துள்ளார். இந்த படத்திற்காக சேறு நிறைந்த வயலில் டிராக்டர் ஓட்டுவது போன்ற சீனில் மிகுந்த கஷ்டப்பட்டாராம். திசைமாறி போன டிராக்டரை சரியாக செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டதாகவும், இது தான் தனது திரை வாழ்க்கையிலேயே மிகவும் கஷ்டப்பட்ட சீன் என்றும் மனம் திறந்துள்ளார். இயக்குநர் அந்த சீனை தத்ரூபமாக வேண்டும் என்று கேட்டதால் சிரமங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார் நம்ம ரவுடி பேபி....!