2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. பக்கா தமிழ் பெண்ணான சாய் பல்லவி டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழில் கரு, மாரி 2, என்ஜிகே போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி கைவசம் பல படங்கள் உள்ளன. தனக்கேன சில கொள்கைகளை வகுத்து திரைப்படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, கதை நன்றாக இருந்தால் மட்டுமே படங்களில் நடிக்க சம்மதிக்கிறார். கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறேன் என தயாரிப்பாளர்கள் ஆசை வார்த்தை கூறினாலும், ஸ்கிரிப்ட் கொடுங்க படிச்சிட்டு சொல்றேன் என கறாராக துரத்தி விடுகிறார் சாய் பல்லவி.

இந்நிலையில் ஆடை விளம்பரங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ஒருவர் சாய் பல்லவியை தன்னுடன் விளம்பரங்களில் நடிக்கும் படி தூது அனுப்பியுள்ளார். வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருவார்கள், எனக்கூறிய அந்த நபரை ஸ்ரிட்டாக நோ சொல்லி அனுப்பிவிட்டாரம் சாய் பல்லவி. சாய் பல்லவிக்கு உள்ள மார்க்கெட்டை பயன்படுத்தி அவரை விளம்பரங்களில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் போட்டா, போட்டி போட்டு வருகின்றன. ஆனால் யார் வலையிலும் சிக்காமல் தப்பித்து வரும் சாய் பல்லவி, விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்பதை தனது கொள்கையாக வைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக அழகு க்ரீம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றும் சாய் பல்லவியை கோடிகளில் வளைக்க பார்த்து மண்ணைக் கவ்வியது. 2 கோடி ரூபாய் வரை சம்பளம் தருவதாக கூறிய அந்த நிறுவனம் சாய் பல்லவியிடம் பேரம் பேசியது. ஆனால் வெள்ளை தான் அழகு என்பதை ஏற்க முடியாது எனக்கூறிய சாய் பல்லவி, அதிரடியாக அந்த விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி கிங் மேக்கராக ஆவதை தடுப்பது மு.க. ஸ்டாலின்தான்.. கராத்தே தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு..! பரபரப்பு வீடியோ..