பிரபலங்கள் பலர், ரசிகர்கள் மத்தியில் சுதந்திரமாக நடந்து கூட செல்ல முடியவில்லை என்பதற்காகவே அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார்கள். அங்கு பெரும்பாலும் இவர்களை பலருக்கும் தெரியாது. எனவே சாதாரண மனிதர்களை போல் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்.

ஆனால், இந்தியாவில் பிரபலங்களை ரசிகர்கள் எங்கு பார்த்தாலும்  கண்டு பிடித்துவிடுவார்கள். அதிலும் தற்போது அனைவர் கையிலும் செல்போன் இருப்பதால் செல்பி எடுத்து கொள்ள கூட்டம் அலை மோதும். ரசிகர்களிடம் இருந்து பிரபலங்களை காப்பாற்றவே பாதுகாவலர்கள் வேண்டும்.

எனவே பாதுகாவலர்கள் இல்லாமல் பிரபலங்கள் வெளியில் செல்லமுடியாத சூழல் உள்ளது, என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி, ஹைதராபாத் விமான நிலையத்தில் முகத்தில் முகமூடி அணிந்தவாறு நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தன்னை ரசிகர்கள் பார்த்தல் கூட்டம் கூடிவிடும் என அஞ்சி, முகத்திற்கு மாஸ்க் போட்டுகொண்டு நடந்து செல்கிறார்.

சமீபத்தில் கூட தளபதி விஜய், விமான நிலையத்தில் ரசிகர்கள் யாரும் தன்னை கண்டுபிடித்துவிட கூட என தலையை கீழே குனிந்து கொண்டு மாஸ்க் அணிந்து சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வைரலாகி வரும் சாய் பல்லவியின் புகைப்படத்தை பார்த்து, ரசிகர்கள் பலர், தளபதியை ஃபாலோ செய்வதாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

அந்த புகைப்படம் இதோ...