இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'பரதேசி' படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் ரித்விகா. ஆனால் இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல படுத்தியது என்றால், அது இயக்குனர் பா.ரஞ்சித் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கி மிக பெரிய ஹிட் கொடுத்த 'மெட்ராஸ்' திரைப்படம் தான்.

இந்த படத்தில் நடிகர் கலையரசனின் மனைவியாக ரித்விகா நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, இவர் 'அழகு குட்டி செல்லம்', 'அஞ்சல', 'ஒரு நாள் கூத்து', 'கபாலி', 'இருமுகன்' என பல படங்களில் நடித்தாலும், முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

மேலும் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' சீசன் 2  நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடி, மக்களின் பேராதரவோடு பிக்பாஸ் சீசன் 2 டைட்டில் வென்றார் என்பது நாம் அறிந்தது தான்.

இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'குண்டு' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் மாடு, எம்.ஜி.ஆர், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரித்விகா.

தற்போது வரை எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் இருக்கும் ரித்விகாவிடம், உங்களுக்கு எந்த நடிகர் மீது கிரஷ் என பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ரித்விகா, நடிகர் விஜய் சேதுபதி பெயரை கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.