’ஏங்க உங்களுக்கு என்ன பிரச்சினை ஏன் மேக் அப் போடாம இருக்கீங்க? என்று ட்விட்டரில் தன்னைக் கலாய்த்த ஒரு ஃபாலோயருக்கு ‘தள்ளிப்போய் விளையாடு தம்புடுகாரு’ என்று மூக்குடை பதிலளித்திருக்கிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான நம்ரதா சிரோத்கர்.

‘93ல் ‘மிஸ் இண்டியா’ பட்டத்தை வென்றவரும் பிரபல இந்தி நடிகையுமான நம்ரதா சிரோத்கர் 2005ல்  ’வம்சி’ படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்தபோது  அவரிடம் காதல் வயப்பட்டுத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. திருமணத்துக்குப் பிறகு நம்ரதா நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழுநேரக் குடும்பத் தலைவியாகிவிட்டார்.

கடந்த 9ம் தேதியன்று தனது கணவர் மகேஷ் பாபுவின் ‘மக்ரிஷி’ படம் வெளியான நிலையில் படத்தின் இயக்குநர் வம்சி அவரது மனைவி மாலினி மற்றும் தனது கணவர் மகேஷ் பாபுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அப்புகைப்படத்தில் அவர் மேக் அப் எதுவும் போடாமல் எளிமையாக இருந்தார்.

அந்தப் புகைப்படத்துக்குக் கீழே கமெண்ட் போட்டிட்டிருந்த கவுரவ் ஷர்மா என்பவர்’நம்ரதா ஏன் மேக் அப் போடலை. ஏதாவது பிரச்சினையா அல்லது மன அழுத்தமா? என்று நலம் விசாரித்திருந்தார். அந்த கமெண்டைப் பார்த்து கடுப்பாகிப் போன நம்ரதா,’ மிஸ்டர் கவுரவ் உங்களுக்கு சதா மேக் அப் போடுற பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்போல இருக்கு. அந்த எதிர்பார்ப்புக்கு எங்க ஏரியா செட் ஆகுது. அப்படிப்பட்ட பொண்ணுங்க இருக்கிற ஏரியாவைத் தேடிக்கிட்டு இந்த இடத்தை உடனே காலி பண்ணுங்க’ என்று அந்த ரசிகருக்கு நாசூக்காக பதிலளித்தார் அவர்.