actress reka sindhu death

கன்னட தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்த நடிகை ரேகாசிந்து சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கார் விபத்து ஒன்றில் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இருந்த பெங்களூருக்கு இவர் விளம்பரப்படம் ஒன்றில் நடிக்க காரில் சென்று கொண்டிருந்தபொது, கார் வேலூர் மாவட்டம், நாட்ராம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரேகா பலியானார். காரை ஓட்டிவந்த டிரைவர் மாயமானதாகவும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

சென்னையை சேர்ந்த பிரபல கல்வி நிறுவனம் ஒன்றின் விளம்பரம் உள்பட பல விளம்பர படங்களில் நடிகை ரேகாசிந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூக வலைத்தளங்களில் 'தெய்வமகள்' தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் ரேகா விபத்தில் மரணம் அடைந்ததாக தவறான செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு வீடியோ ஒன்றில் ரேகா சிந்து தான் நலமாக இருப்பதாகவும், தன்னுடைய மரணம் குறித்த செய்தி தவறானது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.