தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா.  இவரது நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள தெலுங்கு திரைப்படம் 'எவரு'.  திரில்லர் படமாக இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் ரெஜினா ஒரு ட்வீட் செய்துள்ளார்.  அதாவது தனது கேள்விக்கு சரியான பதில் அளிப்பவர்கள் தன்னுடன் காபி குடிக்கலாம் ஏன்பது தான். 

இந்த படத்தில், நடித்துள்ள சமீராவின் கணவர் பெயர் என்ன என்பதுதான் இந்த கேள்வி.  இந்த கேள்விக்கு பதில் அளிப்பவர்கள் தன்னை நேரில் சந்திக்கலாம் என ரெஜினா கூறியுள்ளதால் ரெஜினாவின் ரசிகர்கள் பலர் இவர் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.  

பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாமல் பல நடிகைகள் தவித்து வரும் நிலையில்,  தன்னுடைய படத்திற்கான ப்ரமோஷனை,  இவரே செய்து வருவது தயாரிப்பாளர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.  இவரின் இந்த செயல் தயாரிப்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.