சமீபகாலமாக நடிகைகள்  பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, இந்த மாதிரியான கதைகள் அமைந்தால் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் படமாக இருந்தாலும் அதனை தவிர்த்து விட்டு கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள படங்களையே தேர்வு செய்வதில் கவனமாக உள்ளனர்.

ஏற்கனவே இதேபோல்,  நடிகை நயன்தாரா, அமலாபால், கீர்த்தி சுரேஷ், ஆகியோர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஹீரோயின்களை மையப்படுத்தி உருவாகும் படங்களில் நடித்து வரும் நிலையில், நடிகை ரெஜினாவும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.

அந்த வகையில் திருடன் போலீஸ், உள்குத்து, ஆகிய படங்களை இயக்கிய கார்த்தி ராஜூ இயக்க உள்ள ஒரு படத்தில் ரெஜினா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் 10 ஆம் தேதியில் இருந்து துவங்க உள்ளது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.