பிரபல தனியார் தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் மலையாளம்  ஆகிய இரண்டு மொழிகளில் ஒளிபரப்பான 'பாரிஜாதம்' என்ற சீரியல் மூலம் அனைவராலும் அறியப்பட்டு பிரபலமானவர் சீரியல் நடிகை ரஸ்னா. 

கேரளாவைச் சேர்ந்த இவர், சமீபகாலமாக எந்த சீரியல்களிலும் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். இவரை சீரியலில் நடிக்க வைக்க தேடியவர்களுக்கும் கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான். 

இந்நிலையில் இவர் மாயமாய் போனது குறித்து,  தற்போது ஒரு தகவல் பரவலாக கூறப்படுகிறது.  இவருக்கும் பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் ஒருவருக்கும் இடையில் ரகசியமாக தொடர்பு ஏற்பட்டதாகவும்,  அந்த தயாரிப்பாளருக்கு முன்பே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.  

மேலும் இந்த தொடர்பு காரணமாக, நடிகை ரஸ்னா தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம், அதனால், அவரை ரகசியமாக வீடு எடுத்து வைத்து அந்த  தயாரிப்பாளர்  கவனித்து வருவதாகவும் மாநில ஊடகங்களில் கிசுகிசுத்து வருகிறது.

அனால் இதுவரை இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இது குறித்து நடிகை ரஸ்னாவிடம் இருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. நடிகையை  விசாரிக்க யாராவது தொடர்புகொள்ள முயற்சித்தபோது தொலைபேசி என்னும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகிறார்கள்.