தமிழில் நடிகை ராஷ்மிகா நடிப்பில் தற்போது வரை நேரடி தமிழ் படம் ஒன்று கூட வெளியாகவில்லை என்றாலும், இவருடைய டார்கெட் தற்போது, தல அஜித் மேல் திரும்பியுள்ளது. 

நடிகை ராஷ்மிகா, நடிப்பில் நேரடி தமிழ் படம் இதுவரை ரிலீஸ் ஆக வில்லை என்றாலும், தற்போது நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'சுல்தான்' என்கிற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.  

மேலும் தெலுங்கில் இவர் நடிகர் விஜய்தேவாரக்கொண்டாவிற்கு ஜோடியாக நடித்த,  'கீதாகோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' ஆகிய படங்கள் தெலுங்கு ரசிகர்களை மட்டும் இன்றி, தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் இவர் மீது திரும்ப வைத்தது. எனவே இவரை தமிழில் கதாநாயகியாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டினர்.

அந்த வகையில்,  விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திலும் ராஷ்மிகாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் தற்போது நடிகை மாளவிகா மோகன் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாக ஒரு தகவல் உலாவிக் கொண்டு உள்ளது. 

இது ஒருபுறமிருக்க தற்போது அஜீத் அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா முயற்சி செய்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ள ராஷ்மிகா, அஜித்துடன் எப்போது வேண்டுமானாலும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆரம்பத்திலேயே அஜித்துக்கு டார்கெட் செய்யும் ராஷ்மிகாவின் அதிரடி செயல் மற்ற நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.