நடிகை ராஷ்மிக்கா, நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், ஒரு சில வருடங்களிலேயே தெலுங்கில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார்.

இவரின் கைவசம் தற்போது அல்லு அர்ஜூனுடன் ஒரு தெலுங்கு திரைப்படம் மற்றும் நடிகர் கார்த்தியுடன் தமிழில் 'சுல்தான்' ஆகிய இரண்டு படங்கள் உள்ள.

மேலும் தெலுங்கில் நடிகர் நாணி நடிப்பில் வெளியான 'ஜெர்சி' திரைப்படம் வெற்றி பெற்றதை தொடந்து, விரைவில் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். 

இந்த படத்திலும் இவரையே நாயகியாக நடிக்க வைக்க, திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க அணுகியபோது, அந்த படத்தில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம் ராஷ்மிக்கா. இதற்கு காரணம், யதார்த்தமான கதைகளில் நடிப்பதை விட இவருக்கு கமெர்ஷியல் கதைகளில் நடிக்க தான் அதிகம் விருப்பம் உள்ளதாம்.

பல நடிகைகள் பாலிவுட் வாய்ப்பு வந்தால், உடனே ஓகே சொல்லி வரும் நிலையில், இவரின் செய்கை சற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது ரசிகர்களுக்கு.