பக்கா கதையை ரெடி செய்து, சூப்பர் ஹீரோ, ஹீரோயினை வைத்து, அசத்தல் லொக்கேஷன்களில் படம் எடுத்தாலும், இப்போது ஒரு படத்தை ஓடவைக்க முக்கியமாக தேவைப்படுவது புரோமோஷன் மற்றும் மார்க்கெட்டிங் டெக்னிக். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று எவ்வித பிரிவினையும் இல்லாமல் எல்லா சினிமாக்காரர்களும் பின்பற்றும் ஒரே விஷயம் அதுதான். 

தெலுங்கில் முன்னணி இயக்குநரான மாருதி இயக்கத்தில்  "பிரதி ரோஜு பண்டகே" என்ற படத்தில் சாய் தரம் தேஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷி கண்ணா நடித்துள்ளார். ஹீரோவின் தாத்தாவாக சத்யராஜ் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. கிறிஸ்துமஸ் பரிசாக நாளை வெளியாக உள்ள அந்த படத்தின் புரோமோஷனுக்காக நடிகை ராஷி கண்ணா செய்த காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: அய்யா வைகுண்ட சாமியை தரிசித்த "மூக்குத்தி அம்மன்" நயன்தாரா... நயனுக்காக சட்டை போடாமல் சுற்றும் விக்கி...!

 

"பிரதி ரோஜு பண்டகே" படத்தின் புரோமோஷனுக்காக ஐதராபாத்தில் உள்ள கோகுல் தியேட்டரில் டிக்கெட் விற்றுள்ளார் ராஷி கண்ணா. இந்த தகவலைக் கேள்விப்பட்ட ஏராளமான ரசிகர்கள் தியேட்டரில் குவியத் தொடங்கினர். அனைவருக்கும் ராஷி கண்ணா டிக்கெட் விற்பனை செய்தார். படத்தின் புரோமோஷனுக்காக பிரபல நடிகை தியேட்டரில் டிக்கெட் விற்ற் வீடியோ  மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது.