யாருக்கும் தெரியாமல் படப்பிடிப்பில் இருந்து ஓடிய நடிகை...! வெளிவந்த பகீர் காரணம்..! 

அவளுக்கென்ன அழகியமுகம் படத்தில் நடித்து வரும் நடிகை அனுபமா பிரகாஷ் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, பாதியிலேயே ஓடிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஏகே கேசவன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாடல காட்சிகள் கொடைக்கானலில் நடத்து வருகிறது.

மிக உயரமான இடத்தில் நிற்க வைத்து இந்த படத்தின் பாடல் காட்சிகள் நடைப்பெற்று வருகிறது. இதனால்  நடிகை அனுபமா மிகவும் பயந்து போயுள்ளார். 

இந்நிலையில், மாலை நேரத்தில் தனது ரூம் வரை நடந்து சென்று வருகிறேன் என கூறி ஸ்பாட்டில் இருந்து புறப்பட்ட நடிகை அனுபமா, யாரிடமும் சொல்லாமல் மதுரை விமான நிலையத்திற்கு சென்று, தனது சொந்த ஊரான டெல்லிக்கு புறப்பட்டு சென்று உள்ளார். 

இந்த உண்மை தெரியாமல் நடிகைக்கு என்ன வாயிற்று எங்கு சென்றார் என அன்று முழுவதும் தேடி அலைந்து உள்ளனர் படக்குழுவினர். பின்னர் அனுபமா டெல்லி சென்றது தெரியவர, தயாரிபளார் டெல்லி சென்று அவரை சமாதானம் செய்து வைத்து உள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.