இயக்குநர் ராஜு முருகனின் "ஜோக்கர்" படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பின்னர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக "ஆண் தேவதை" என்ற படத்தில் நடித்தார். அந்தப்படம் காலை வாரியதால், ரம்யா பாண்டியனுக்கு எதிர்பார்த்த அளவில் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பட வாய்ப்புகளை தன்பக்கம் ஈர்ப்பதற்காக கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார் ரம்யா பாண்டியன்.

அதில் தனது இடுப்பழகை காட்டி ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழகத்தையும் நிலைகுலைய வைக்க முடியும் என்று நிரூபித்தார் ரம்யா பாண்டியன். அதுவரை பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவரை தொலைக்காட்சிகள் அனைத்தும் வரிசையில் நின்று பேட்டி எடுத்தன. 

செலவே இல்லாமல் சூப்பராக போட்டோ ஷூட் எடுத்து இளசுகளை கிறங்கடிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டிய ரம்யா பாண்டியனின், பெயரில் பல போலி சோசியல் மீடியா கணக்குகள் உருவாகிவிட்டன. அதன் விளைவு சமீபத்தில் ரம்யா பாண்டியனின் நிர்வாண போட்டோ என்ற பெயரில் போலி போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனைக் கேள்விப் பட்டு பதறிப்போன ரம்யா பாண்டியன் தனது பெயரில் பல போலி டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சோசியல் மீடியாவில் உலவும் நிர்வாணப் படம் தன்னுடையது அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார்.