Asianet News TamilAsianet News Tamil

’எங்கடா இங்க இருந்த ரம்யா பாண்டியன் இடுப்பைக் காணோம்?’...கொந்தளிக்கும் சமூக வலைதளம்...

இரண்டு தினங்களுக்கு முன் படபடப்பான படமாக ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பு ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், அதை சில கிராதக ஃபோட்டோஷாப்பர்கள் இழுத்து மூடி மறைத்ததால் தற்போது ‘’எங்கடா இங்க இருந்த ரம்யா பாண்டியன் இடுப்பைக் காணோம்?’என்ற கேள்வி வலைதளவட்டாரங்களில் வைரலாகி வருகிறது. இப்போது அவரது இடுப்பு மடிப்பு இழுத்து மூடப்பட்ட படமும் வைரலாகி வருகிறது.

actress ramya pandian army started
Author
Chennai, First Published Aug 26, 2019, 1:07 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இரண்டு தினங்களுக்கு முன் படபடப்பான படமாக ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பு ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், அதை சில கிராதக ஃபோட்டோஷாப்பர்கள் இழுத்து மூடி மறைத்ததால் தற்போது ‘’எங்கடா இங்க இருந்த ரம்யா பாண்டியன் இடுப்பைக் காணோம்?’என்ற கேள்வி வலைதளவட்டாரங்களில் வைரலாகி வருகிறது. இப்போது அவரது இடுப்பு மடிப்பு இழுத்து மூடப்பட்ட படமும் வைரலாகி வருகிறது.actress ramya pandian army started

நேற்று முன் தினம் சனியன்று நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்த செய்தி இது....முகநூல் ட்விட்டர் வலைதளங்களில் குறிப்பிட்ட நாளில் என்ன டாபிக் ட்ரெண்டிங் ஆகுமென்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே அகப்படாத ரகசியம். அந்த வகையில் கடந்த ஒன்றிரண்டு தினங்களாக நடிகை ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பு போஸ் ஒன்று கன்னாபின்னாவென்று வைரலாகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியவாதிகள் அப்படத்தைப் பார்த்து நீண்ட நெடிய பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் எழுதும் கவிதைகளிலிருந்தும் கமெண்டுகளிலிருந்தும் காணமுடிகிறது.

இலக்கியவாதிகளே ஏங்குகிறார்கள் என்பதால் அவரைப் பற்றிய சிறுகுறிப்பு வரைவதில் ஒன்றும் தவறில்லை. திருநெல்வேலிச் சீமையில் 1993 ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி அவதரித்தவர் ரம்யா.பாண்டியன் அப்பா.இன்னும் மணமாகவில்லை. தமிழில் ‘டம்மி டப்பாஸு’என்ற டம்மியான படத்தின் மூலம் 2015ல் அறிமுகமானார். ஆனால் நல்ல அடையாளம் கொடுத்த படம் ராஜூ முருகனின் ‘ஜோக்கர்’. அந்த அடையாளத்தை அழித்து ஒழித்த பெருமை சமுத்திரக்கனியுடன் அவர் நடித்த ‘ஆண் தேவதை’படத்தையே சேரும். ஏனெனில் அப்படத்தில் ஒரு நெகடிவ்வான ரோல் பண்ணியிருந்தார் ரம்யா. actress ramya pandian army started

அப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்ததால், அடுத்து உருப்படியான படங்கள் வராததால், மெல்ல விரக்தி மோடுக்கு வந்த ரம்யா பாண்டியன் வழக்கமாக நடிகைகள் கையாளும் யுக்தியில் கிளுகிளுப்பான படங்கள் எடுத்து தனது ட்விட்டர், முகநூல் ,இன்ஸ்டாகிராம் பக்கங்களில் சூடு ஏற்ற ஆரம்பித்தார். விளைவு....கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இடுப்பு என்ற விஷயம் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் இழந்திருந்தது. அதற்கு உயிரளித்திருப்பவர் ரம்யா பாண்டியன்...என்று தொடங்கி வலைதள வட்டாரங்களில் ரம்யா பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என்ற பாட்டுதான் டாப்டென்னில் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.actress ramya pandian army started

நமது இந்த செய்தியைத் தொடர்ந்து ஏற்கனவே ட்ரெண்டிங்கில் இருந்த ரம்யா பாண்டியன் குறித்த பல குறிப்புகள், குறிப்பாக அவரது இடுப்பு மடிப்பு குறித்து பகிரப்பட்டன. பலரும் அவர் ’ஜோக்கர்’ படத்தின் மூலம் சாதிக்காமல் போனதை, ஒரே ஒரு ஸ்டில்லில் சாதித்துவிட்டதாகவெல்லாம் எழுதியிருந்தனர். ட்விட்டரில் ரம்யா பாண்டியனுக்கு அவசர அவசரமாக ஆர்மிகள் துவங்கப்பட்டன. முகநூலில் இவ்வளவு நாளாக சாதுவாக இருந்த பலரும் சேதுவாக மாறி ரம்யா பாண்டியனை நினைத்து நெஞ்சுருகி ‘எங்கே செல்லும் இந்தப் பாதை’ பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ‘நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்’என்று இன்னும் மனுஷ்யபுத்திரனிடமிருந்து ஒரு ஆதங்கக் கவிதை வராதது ஒன்றுதான் குறை.

Follow Us:
Download App:
  • android
  • ios