தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள் பலரும், நடிப்பை அடுத்து தொழில் ரீதியாக மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சில நடிகர்கள் தான் திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் அந்த வகையில் தற்போது நடிகை ரம்யா நம்பீசன், இயக்கத்தின் மீது கவனம் செலுத்தி ஒரு குறும்படத்தையும் இயக்க  துவங்கியுள்ளார்.

இவர் இயக்கி வரும் குறும்படம் ஒன்று விரைவில் சமூக வலைத்தளத்தில் வெளியாக உள்ளது. இவரின் இந்த முயற்சிக்கு பிரபல இயக்குனர், பத்ரி வெங்கடேஷ் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். 

மலையாள திரையுலகில், 2000 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன். பின் தொடந்து பல மலையாள படங்களில் நடித்து வந்த இவர், 2006 ஆம் ஆண்டு தமிழில்  ’ஒரு நாள் ஒரு கனவு’  படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் ’ராமன் தேடிய சீதை’, ‘குள்ளநரிக்கூட்டம், ’பீட்சா’ ’சேதுபதி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தும் இதுவரை முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை.

நடிப்பை தாண்டி பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.   ரம்யா, பாடகி, நடிகை என்பதை தாண்டி... இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார். 

‘அன்ஹைட்’ என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு குறும்படத்தை இவர் இயக்கி வருகிறார். இந்த குறும்படம் விரைவில், சமூக வலைத்தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவரின் இந்த அதிரடி அவதாரத்திற்கு இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரம்யாவின் இந்த செயலை கேட்டு மலையாள திரைபிரபலங்கள் பலர் அதிர்ச்சியில் அசைந்து போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும் ரம்யா நம்பீசன் தற்போது ‘தமிழரசன்’, ’ரேஞ்சர்,’ , ‘கெட்ட பையன் சார் இவன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.