மலையாள திரையுலகில், 2000 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன். பின் தொடந்து பல மலையாள படங்களில் நடித்து வந்த இவர், 2006 ஆம் ஆண்டு தமிழில்  ’ஒரு நாள் ஒரு கனவு’  படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் ’ராமன் தேடிய சீதை’, ‘குள்ளநரிக்கூட்டம், ’பீட்சா’ ’சேதுபதி’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தும் இதுவரை முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை. நடிகை என்பதை தாண்டி பாடகி, இயக்குநர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 

தற்போது விஜய் ஆண்டனியுடன் தமிழ்ச்செல்வன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரம்யா நம்பீசன், மலையாளத்தில் பிரபல நடிகை நஸ்ரியாவின் கணவரும், பிரபல நடிகருமான பகத் ஃபாசிலோடு சப்பா குரிஷு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பகத்திற்கு ரம்யா நம்பீசன் கொடுத்துள்ள ஹாட் லிப் லாக் சீன் ரசிகர்களை சூடேற்றியது. 

ஆனால் தற்போது அந்த லிப் லாக் காட்சி குறித்து மனம் திறந்துள்ள ரம்யா நம்பீசன் கூறிய கருத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேட்டி ஒன்றில் கூறியுள்ள ரம்யா நம்பீசன், தனக்கு லிப் லாக் கொடுக்க தெரியாது என்றும், இயக்குநர் படத்தில் இப்படி ஒரு காட்சி இருப்பதாக என்னிடம் சொன்ன போது எனக்கு தெரியாது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் கமினா என்ற படத்தில் அதிக லிப் லாக் காட்சிகள் இருக்கும், அந்த படத்தை பார்த்தே லிப் லாக் கொடுப்பது எப்படி என்று தெரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார்.