பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பெரிதாக எந்த ஒரு சண்டை சச்சரவும் இன்றி, அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. ஹவுஸ் மேட்ஸ் அனைவரும், கிராமத்து கலைகளை கற்று கொண்டது மற்றும் இன்றி அதனை செய்து காட்டி நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யப்படுத்தினர்.

இது ஒரு புறம் இருக்க, நடிகர் கவினின் அம்மா ஏல சீட்டு மோசடி வழக்கில் ஜெயிலில் இருக்கிறார். இந்த தகவல் ஏற்கனவே கவினுக்கு ஏற்கனவே தெரியும் என சில செய்திகள் வெளியானது. அதே போல் இன்றைய தினம் , இது குறித்து கவினிடம் கமல் வாய்திறப்பாரா? என்கிற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஆரம்பமாகி, ஒரு மாதத்திற்கு பின் துவங்கப்பட்டது தெலுங்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சி. இதில், தற்போது வரை 5 பிரபலங்கள் வெளியேறி உள்ளனர். மேலும், பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அவ்வப்போது பிரபலங்கள் சிலர் தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றைய தினம், சிறப்பு விருந்தினராக நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளே செல்ல உள்ளார் என்பது, தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது அதிக நபர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.