ஊரடங்கு உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா தன்னுடைய கோர முகத்தை காட்ட துவங்கியதுமே, மத்திய மற்றும் மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் பலர் அத்தியாவசிய தேவைகளை தவிர, மற்ற நேரங்களில் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

முடங்கிய பணிகள்:

இந்த 144 தடையால், ஒட்டு மொத்த பணிகளும் முடங்கியுள்ளது. இதனால், கூலி தொழிலாளர்கள் முதல், சிறு, குறு, தொழில் செய்பர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஐடி மற்றும் மற்ற நிறுவனங்கள் கூட, வீட்டில் இருந்தபடியே பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்து.பிரபலங்களின் பொழுது போக்கு:

எப்போது, ஷூட்டிங், டப்பிங் என பிஸியாகவே இயங்கி கொண்டிருந்த பிரபலங்கள் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதால் தங்களுக்கு பிடித்த வேலைகள், மற்றும் குடும்பத்துடன் ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார்கள். அவ்வப்போது வீட்டில் இருந்தபடி வீடியோ கால் மூலம் பேசி தங்களுடைய நண்பர்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ரம்யா கிருஷ்ணன்:

அந்த வகையில், பாகுபலி ராஜமாதா... நடிகை சார்மியுடன் வீடியோ கால் பேசும் போது அவருக்கு கொடுத்த முத்தத்தை புகைப்படமாக எடுத்து, நடிகை சார்மி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எப்போதும் ரம்யா கிருஷ்ணன் வீடியோ காலுக்கு நான் அடிமை என டைப் செய்து, இவர் வெளியிட்டுள்ள முத்த புகைப்படம் தற்போது இணையதளத்தை கலக்கி வருகிறது. 

வயசானாலும்... அழகும் ஸ்டைலும் இன்னும் கொஞ்சம் கூட மாறல நம்ப ரம்யா கிருஷ்னனுக்கு ...