நடிகை ரம்பாவுக்கு இவ்வளவு பெரிய மகளா..? ஆச்சர்ய புகைப்படம் உள்ளே...! 

1990 முதல் 2010 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மிகவும் சினிமா துறையில் பிஸியாக நடித்து வந்த ஒரு நடிகை என்றால் ரம்பா என்று கூறலாம். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 1976 ஆம் ஆண்டு பிறந்த ரம்பா தெலுங்கு தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள.

இவர் 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு மூன்று பிள்ளைகளை பெற்று எடுத்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளான். இதுவரை நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள ரம்பா தற்போது குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளை பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இடைப்பட்ட காலத்தில் ரம்பா மற்றும் அவருடைய கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றம் வரை சென்று பின்னர் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் உள்ளத்தை அள்ளித்தா, சிவசக்தி, விஐபி, ராசி, மின்சார கண்ணா, உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, த்ரீ ரோசஸ், பெண் சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ரம்பா அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய  புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய ரசிகர்கள் இந்த புகைப்படத்தின் கீழ் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்