‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச்சலம்’, ‘காதலா காதலா’, ‘குயிக் கன் முருகன்’ உட்பட தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, கன்னடம், மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்பா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் இந்திரகுமார் என்கிற தொழிலதிபரை, திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக.

நடிகை ரம்பா விவாகரத்து கோரி குடும்ப நலக்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. 

ஆனால் இதை நடிகை ரம்பா தரப்பு மறுத்துள்ளது. தாம் சேர்ந்த வாழ கேட்டே குடும்ப நலக்கோர்ட்டில் மனு செய்ததாக ரம்பா தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு டிசம்பர் 3ம் தேதிக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து.

இன்று விசாரணைக்கு வருவதாக இருந்த ரம்பாவின் வழக்கு, நீதிபதி வராத காரணத்தால் மீண்டும் அடுத்த மாதம் 21 தேதிக்கு ஒற்றிவைக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது.