actress ramba and her husband

நடிகை ரம்பா கடந்த 2010ம் ஆண்டு இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் இவர்களுக்குள் ஒரு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் சில நாட்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

மேலும் தன்னுடைய கணவரை சேர்த்து வைக்கோரி ரம்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார், மேலும் குழந்தைகள் பராமரிப்பு செலவு ஆகியவற்றை கணவரே ஏற்க வேண்டும் எனவும் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதற்க்காக நடிகை ரம்பா தனது இரண்டு குழந்தைகளுடன் நேரில் ஆஜரானார், அதே போல அவரது கணவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.