தமிழில் கடந்த மாதம் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, பல்வேறு சண்டை சச்சரவுகளுக்கு மத்தியில், நல்லபடியாக ஒளிபரப்பாகி வருகிறது. அதே சமயத்தில், ஒரு சிலர் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.

அதே போல், தெலுங்கில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த முறை நாணி, இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம், சரியில்லை என கூறப்பட்ட நிலையில், இவர் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ரகுல் ப்ரீத்சிங் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிகர் நாகர்ஜூனாவுடன், நடித்துள்ள 'மன்மதடு 2' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி, வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியிக்காக சிறப்பு விருந்தினராக அவர் பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்ல உள்ளார்.

தற்போது 'மன்மதடு 2 ' படத்தின் ப்ரோமோசின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும், நடிகர் கமலஹாசனுக்கு ஜோடியாகவும் 'இந்தியன் 2 ' படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.