actress rajishitha issue
நடிகர் சிம்பு நடித்த 'தம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் கொடுத்தவர் நடிகை ரக்ஷிதா. இந்த படத்தை தொடர்ந்து விஜயுடன் 'மதுர' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
பின் உடல் எடை அதிகமான காரணத்தால் பல தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்த இவர், தொடர்ந்து கன்னட படங்களிலும், தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார். கன்னட படங்களில் இவர் நடித்த போது முன்னணி நடிகர் பிரேமை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
தற்போது வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவர் ஷூட்டிங் சென்றபோது ஒரு விபத்தில் சிக்கி இவருடைய கால் உடைந்துள்ளது இந்த தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் நடிகை ரக்ஷிதா.
Ad2A post shared by Rakshitha Prem (@rakshithaprem) on
