சினிமா துறையில் பெண்களுக்கு அதிகம் வாய்ப்பு மறுக்கப் படுவதாகவும் குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும்   நடிகை ராய் லட்சுமி வலியுறுத்தியுள்ளார். 

தெலுங்கு கன்னடம் மலையாளம் என சுமார் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. தமிழில் இவர் நடித்த அரண்மனை திரைப்படம் பெரிய ஹிட்  ஆனதை தொடர்ந்து ராய் லட்சுமிக்கு தனி ரசிகர் பட்டாளமே  தமிழில் உள்ளனர்.  இந்நிலையில் சினிமா துறையில் பெண்களுக்கு வாய்ப்பு  மறுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர்,   சினிமா துறையில் மட்டுமல்ல எந்தத் துறையை எடுத்தாலும் பெண்களுடன் ஆண்களுக்கு ஒத்துப் போவதில்லை என்ற நிலை உள்ளது, அதற்கு  ஆண்களின் ஈகோவும் ஒரு காரணம்.  பல நேரங்களில் ஆண்கள்  பணியாற்றும் சூழலில் பெண்கள் இருப்பதை அவர்கள் விரும்புவதில்லை, காரணம் அந்தப் பெண்களை தாங்கள் கட்டுப்படுத்த முடியாமல் போகும்  என்ற எண்ணமும் அவர்கள் மத்தியில் உள்ளது என்றார். 

பெண் இருந்தால் தங்களால் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதும் ஒரு காரணம்,  உதாரணமாக ஒரு பெண் ஒளிப்பதிவாளர் அல்லது டெக்னீசியன் பணி புரிவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் பல ஆண் இயக்குனர்களுக்கு அது பிடிக்காது  என்றார்.  சினிமா துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையிலேயே இருக்க விரும்புவர். அதனால் பெண்களை தவிர்க்கின்றனர் என அவர் குற்றம் சாட்டினார். ஆனால் தன் கலையை மற்றும் திறமையை மட்டும் நம்பியுள்ள இயக்குனர்கள் பெண்களுக்கும் வாய்ப்பு கொடுத்து தங்கள் படைப்பை சுவாரசியமாக்கி சுவை கூட்டி வருகின்றனர் என அவர் பாராட்டினார்.