நடிகை ராதிகா, சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் தன்னுடைய ஈடு இணை இல்லா நடிப்பால், அனைவரையும் கவர்ந்தவர். அம்மா, அக்கா, பாட்டி, வில்லி என எப்படி பட்ட , கடினமான வேடத்தை கொடுத்தாலும், அசால்டாக நடித்து ஆச்சர்யப்படுத்துபவர்.

இந்நிலையில், இவர் தற்போது முதல் முறையாக நிகழ்ச்சி தொகுப்பாளராகும் மாறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில், வரும் 28 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு விளையாட முடியும்.

 

பெண்களின் சிறு சிறு ஆசைகளை கூட, நிறைவு செய்துகொள்ள முடியாமல் இருக்கும் பல பெண்களுக்கு இந்த நிகழ்ச்சி உதவியாக இருக்கும் என்கிற தோரணை காட்டப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, தொலைக்காட்சி தரப்பில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு பதில் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ப்ரோமோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது...