தமிழ் சினிமாவில், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலந்து கட்டி நடித்து, தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகை ராதிகா. 

இவரின் குடும்பமே கலை குடும்பம் என சொல்லலாம், இவருடைய அப்பா, எம்.ஆர்.ராதாவில் தொடங்கி, அண்ணன் ராதாரவி, தங்கை நிரோஷா, கணவர் சரத்குமார் என அனைவருமே திரையுலகை சேர்ந்தவர்கள் தான்.

இந்நிலையில் நடிகை நிரோஷா சமூக வலைதள ஊடகம் ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டியில், தன்னால் ஒரு ஷாட்டில் நடிக்க முடியாத போது, அக்கா ராதிகா அனைவர் முன்னிலையிலும் திட்டி விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஒரு படத்திற்காக அக்கா ராதிகா மற்றும் நான் இணைந்து பணியாற்றினோம்.  இந்த படத்தில் நான் மிகவும் துரு துரு, ரௌடித்தனமான பெண்.  ஆனால் அக்கா மிகவும் அமைதியான பெண். 

இந்த படத்தில் நான் சும்மா ரஜினி ஸ்டைலில் கையில் வைத்திருக்கும் ஐஸ் க்ரீமை தட்டி விட்டு வாயில் பிடிக்க வேண்டும். நான் பலமுறை அதனை முயற்சி செய்தும் என்ன ஷாட் ஓகே செய்ய முடியவில்லை.

அதனால் நேராக அக்காவிடம் சென்று என்னால் முடியவில்லை என கூறினேன். அவர் அனைவர் மத்தியிலும் பின் என்ன டாஸுக்கு நடிக்க வந்த என கேட்டார். உடனே கோவம் வந்து விட்டது. அதே கோவத்தில் சென்று நடித்ததும் ஷாட் ஓகே ஆனது. பின் அம்மாவிடம் கூட இனி அவர் கூட நடிக்க மாட்டேன் என கூறியதாக நிரோஷா இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வேலை விஷயத்தில் இப்படி இருந்தாலும், ஒரு அக்காவாக அவர் மிகவும் இனிமையானவர் என்றும், தனக்கு என்ன பொருத்தமாக இருக்கும் என்ன பிடிக்கும் என்பதை கூட பார்த்து பார்த்து, கவனித்து கொள்வார் என ராதிகாவை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நிரோஷா.