தமிழ் திரையுலகின் ஆல் ரவுண்டர் பெண்மணி என்றால் அதில் நடிகை ராதிகாவும் ஒருவர். கதாநாயகியாக கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகி, பின் குணச்சித்திர நடிகை, சீரியல் நாயகி, தயாரிப்பாளர், அரசியல்வாதி என தனக்கென தனி அங்கீகாரத்தை உருவாக்கியவர்.

தற்போது தொகுப்பாளராகவும், பிரபல தொலைக்காட்சியில் 'கோடீஸ்வரி' என்கிற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.

சமீபத்தில் ராதிகா பிக்பாஸ் ஆரவுக்கு அம்மாவாக நடித்த, 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடந்து இவரின் கை வசம் தற்போது, பிறந்தால் பராசக்தி, ஓ அந்த நாட்கள், துருவ நட்சத்திரம், ஜெயில், வானம் கொட்டட்டும், குருதி ஆட்டம் ஆகிய படங்கள் உள்ளன.

அதே போல், இவர் பெண்களுக்காகவே நடத்தி வரும் 'கோடீஸ்வரி நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கும் போது கூட என்ஜாய்யிங் மை ஒர்க் என கூறி, ஷூட்டுக்கு தயாராகும் போது குட்டி ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ இதோ...